Tuesday, August 10, 2010

ஏன் எழுதல?

'ரொம்ப நாளா ஒண்ணுமே உங்ககிட்டேந்து வர்லியே?! என்ன பண்ணிண்டுருக்கேள்?'னு அவாளும் இவாளும் கேட்டா.

'எழுதாம இருக்கேன்'னேன்.



'ஏன் எழுதணும்?' , 'எழுதித்தான் ஆணுமா?'ன்னு கேள்வி வந்தா எழுதாம இருக்கறது நல்லதும்பேன். சில பேர் எழுதினத படிச்சுப் பாப்பேன். ரொம்ப ஆச்சரியமா இருக்கும். 'எப்படி இவா எழுதிண்டே இருக்காள்?'னு தோணும். அதுல சில பேர் 'எப்படி இவா இவ்ளோ நல்லா எழுதிண்டே இருக்காளே?'னு நெனக்க வெப்பா.



எழுதறதுக்கு கற்பனாசக்தி வேண்டாம், சுத்தும் முத்தும் பாத்துண்டு, காதுல விழறத கேட்டுண்டு இருந்தாலே போதுங்கறா! என்ன சுத்தி இருக்கறத பாத்துண்டு, பேசறவாளை கேட்டுண்டு இல்லாம அதுலேயே அமுங்கிப் போயிட்டேன். தேர்ட் பர்ஸனா இல்லாம, ·பர்ஸ்ட் பர்ஸனா மாறினதுல எழுத்து தொலஞ்சு போச்சு!



அப்பப்போ மனஸ¤ல தாட்ஸ் ஓடும். பிள்ளையார் சுழி போடுவேன்.

கொஞ்ச நேரத்துல ஆயாஸமா வரும். 'எழுதி எழுதி என்னத்தக் கண்டேன்?'னு ஸெல்·ப் பிட்டில படைப்பு தொலைஞ்சு போயி, எடிட்/ஸெலக்ட் ஆல் பண்ணி டெலிட் பண்றதால படைப்பாளி காணாமப் போயிடறான்.



முன்ன நானே 'கவிதை'ன்னு சொல்லிண்டு கிறுக்கிண்டிருந்தேன். அப்புறமா, சித்தர் பாடல்கள், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம் பொரட்டினப்போ பயம் வந்துருத்து. 'புள்ளன்னா இப்டித்தான் இருக்கணும்'னு வினுசக்ரவர்த்தி மனோரமாகிட்ட 'அண்ணாமலை' படத்துல சொல்வாரே, அந்த மாதிரி 'பாட்டு, கவிதைன்னா இப்டித்தான் இருக்கணும்'னு தோணித்து. அதனால இப்பல்லாம் 'கவிதை'யும் எழுதறதுல்ல!



'இப்ப கூட இதையெல்லாம் உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்?'னு நீங்க கேக்கலாம். 'என்ன மாதிரி இருக்காதீங்கோ'னு அட்வைஸாவும் இருக்கலாம்; இல்ல பாரதி சொன்னா மாதிரி 'நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?'னு தூக்கத்தைக் கலச்சுண்டு எழுதற எழுத்தாவும் இருக்கலாம். இல்ல, சாதாரணமா வாழ நெனக்காத, எப்படி அசாதாரணமா வாழணும்னு தெரியாத ஒருத்தனோட புலம்பலாவும் இருக்கலாம். இல்ல, ஸம்ஸார சாகரத்துல மூழ்கிண்டு, நீச்சல் தெரியாம, கைய மட்டும் நீட்டி நீட்டி கேக்கற லாஸ்ட் ஹெல்ப்பாவும் இருக்கலாம்.



'ஸார்! ரெடியாயிருச்சா?' என்று கேட்டவனிடம்

'அடப்போடா! வெரி ப்ரைட் ப்ராமின், மெடிகல்ல ஸீட் இல்லாம, மெண்டலாயி என்ன பேத்துவான்னு டயலாக். ப்ராமின் லாங்க்வேஜுல டயலாக் ரைட்டிங் இவ்ளோ கஸ்டமா?! ஐயர யாராச்சும் இட்டாந்துருக்கலாம்?! கொஞ்சம் கம்னு கிட, முடிச்சிர்றேன்' எனத் தாஜா செய்து கொண்டிருந்தார் வசனகர்த்தா தனசேகரன்.

Friday, June 11, 2010

இது எப்டி இருக்கு?

அன்று....1

விசாலாக்ஷ¢ 'குளிப்பது' எனத் தீர்மானித்து விட்டாள். விச்வநாதனுக்குப் பிடிக்கவே பிடிக்காது எனத் தெரிந்தும்.

திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தனத்தில் 150 ரூபாய்க்கு மேற்கே பார்த்த வீடு. 12 மணிக்கு மேல் சுள்ளென்று வீட்டுக்குள் வெயில் வந்துவிடும். அதுவும் கோடை என்றால் சன்னல்களோடு, கதவையும் திறந்து வைத்து, உஷா ·பேன் லொடலொடத்தாலும் வியர்த்துக் கொண்டேயிருக்கும். அதுவும் 'மூன்று' நாட்கள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். நரகம்!

படுக்கையறை, சமையலறை, சாமியறை எல்லாம் ஒன்றுதான்! அதையே தடுப்பாக்கி சிறிய அறை ஒன்று விசாலாக்ஷ¢க்கு ஒதுக்கப்படும்; குளிக்கக் கூடாது. ஆடை மாற்றக்கூடாது. ஸைடோஜி தெருவில் இருக்கும் நாத்தனார் பெண்களில் ஒன்று சமையலுக்கு வரும் (விச்வநாதனுக்கு சமையல் வராது!). எல்லோரும் சாப்பிட்ட பின், பசியில் உயிர் போனபின், ஒரே தட்டில் வெவ்வேறு கிண்ணங்களுடன் மிச்சம் மீதி வரும். ஏதேனும் வேண்டுமென்றால் தடுப்புக்குப் பின்னால் குரல் கொடுத்தால் விச்வநாதன் 'என்ன?' என்று சிடுசிடுப்பான். என்ன செய்வது?

இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாலை 4 மணிக்கு கார்பொரேஷன் பம்ப்-ல் பக்கத்து குடித்தனக்காரியை (தொடக்கூடாது!) தண்ணீர் அடிக்க வைத்து, பொது(?! பின்னே? 6 குடித்தனக்காரர்களுக்கு 2 குளியலறைகளை எப்படிச் சொல்வதாம்?) குளியலறைக்குள் கொண்டு செல்ல வைத்து, 5.30க்கு வரும் விச்வநாதனுக்குத் தெரியாதுதான் என்ற தெகிரியத்தில் குளித்து விட்டு வந்தால்...

விச்வநாதன் அன்று பார்த்து பர்மிஷன் போட்டுவிட்டு 4.30க்கே வந்திருந்தான்!

ஒரே முறைப்பில் விசாலாக்ஷ¢க்குச் சப்தநாடியும் ஒடுங்கிப்போய், கால்கள் துவளத் தொடங்கின. ஒரு வாரம் வரையில் பேசாமல் மௌனம் காத்த விச்வநாதனுக்கு முன் விசாலாக்ஷ¢ எடுத்த முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போயின. அப்பா வந்து அவளைத் திட்டிவிட்டு, சமாதானம் செய்துவைத்த போது விசாலாக்ஷ¢க்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை.

கதை இங்கு முடியவில்லை...

அன்று...2

காலையில் அரை மணி குளித்து, அம்மா செய்து வைத்த இட்லிகளை சமையலறைக்குள் சென்று வயிறு நெறய சாப்பிட்டு, சுத்தமான உயர் ரக சுரிதார் அணிந்து, போகும் முன் "ஸ்மார்ட்டா இருக்க பாட்டி' என்று முத்தம் கொடுத்த பேத்தி ஜலஜாஸ்ரீயைப் பார்த்து 'ஏண்டி டயர்டா இருக்கே?' என விசாலாக்ஷ¢ கேட்ட போது 'பீரியட்ஸ் பாட்டி' என்று படு கேஷ¤வலாகச் சொன்னாள்!

கதை இன்னும் முடியவில்லை....!

இன்று...

இப்போது தெரியறதா? விசாலாக்ஷ¢ என்கிற நான் ஏன் ஜலஜாஸ்ரீயுடன் ரெண்டு வருஷமா பேசறதில்லைன்னு?!