'ரொம்ப நாளா ஒண்ணுமே உங்ககிட்டேந்து வர்லியே?! என்ன பண்ணிண்டுருக்கேள்?'னு அவாளும் இவாளும் கேட்டா.
'எழுதாம இருக்கேன்'னேன்.
'ஏன் எழுதணும்?' , 'எழுதித்தான் ஆணுமா?'ன்னு கேள்வி வந்தா எழுதாம இருக்கறது நல்லதும்பேன். சில பேர் எழுதினத படிச்சுப் பாப்பேன். ரொம்ப ஆச்சரியமா இருக்கும். 'எப்படி இவா எழுதிண்டே இருக்காள்?'னு தோணும். அதுல சில பேர் 'எப்படி இவா இவ்ளோ நல்லா எழுதிண்டே இருக்காளே?'னு நெனக்க வெப்பா.
எழுதறதுக்கு கற்பனாசக்தி வேண்டாம், சுத்தும் முத்தும் பாத்துண்டு, காதுல விழறத கேட்டுண்டு இருந்தாலே போதுங்கறா! என்ன சுத்தி இருக்கறத பாத்துண்டு, பேசறவாளை கேட்டுண்டு இல்லாம அதுலேயே அமுங்கிப் போயிட்டேன். தேர்ட் பர்ஸனா இல்லாம, ·பர்ஸ்ட் பர்ஸனா மாறினதுல எழுத்து தொலஞ்சு போச்சு!
அப்பப்போ மனஸ¤ல தாட்ஸ் ஓடும். பிள்ளையார் சுழி போடுவேன்.
கொஞ்ச நேரத்துல ஆயாஸமா வரும். 'எழுதி எழுதி என்னத்தக் கண்டேன்?'னு ஸெல்·ப் பிட்டில படைப்பு தொலைஞ்சு போயி, எடிட்/ஸெலக்ட் ஆல் பண்ணி டெலிட் பண்றதால படைப்பாளி காணாமப் போயிடறான்.
முன்ன நானே 'கவிதை'ன்னு சொல்லிண்டு கிறுக்கிண்டிருந்தேன். அப்புறமா, சித்தர் பாடல்கள், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம் பொரட்டினப்போ பயம் வந்துருத்து. 'புள்ளன்னா இப்டித்தான் இருக்கணும்'னு வினுசக்ரவர்த்தி மனோரமாகிட்ட 'அண்ணாமலை' படத்துல சொல்வாரே, அந்த மாதிரி 'பாட்டு, கவிதைன்னா இப்டித்தான் இருக்கணும்'னு தோணித்து. அதனால இப்பல்லாம் 'கவிதை'யும் எழுதறதுல்ல!
'இப்ப கூட இதையெல்லாம் உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்?'னு நீங்க கேக்கலாம். 'என்ன மாதிரி இருக்காதீங்கோ'னு அட்வைஸாவும் இருக்கலாம்; இல்ல பாரதி சொன்னா மாதிரி 'நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?'னு தூக்கத்தைக் கலச்சுண்டு எழுதற எழுத்தாவும் இருக்கலாம். இல்ல, சாதாரணமா வாழ நெனக்காத, எப்படி அசாதாரணமா வாழணும்னு தெரியாத ஒருத்தனோட புலம்பலாவும் இருக்கலாம். இல்ல, ஸம்ஸார சாகரத்துல மூழ்கிண்டு, நீச்சல் தெரியாம, கைய மட்டும் நீட்டி நீட்டி கேக்கற லாஸ்ட் ஹெல்ப்பாவும் இருக்கலாம்.
'ஸார்! ரெடியாயிருச்சா?' என்று கேட்டவனிடம்
'அடப்போடா! வெரி ப்ரைட் ப்ராமின், மெடிகல்ல ஸீட் இல்லாம, மெண்டலாயி என்ன பேத்துவான்னு டயலாக். ப்ராமின் லாங்க்வேஜுல டயலாக் ரைட்டிங் இவ்ளோ கஸ்டமா?! ஐயர யாராச்சும் இட்டாந்துருக்கலாம்?! கொஞ்சம் கம்னு கிட, முடிச்சிர்றேன்' எனத் தாஜா செய்து கொண்டிருந்தார் வசனகர்த்தா தனசேகரன்.

1 comment:
தலைவா
இது உன்னுதா இல்ல வேறேங்கதாவது இட்டாந்தியா...புலம்பலும் கூட சுவாரசியமா இருக்குப்பா
உன் எழுத்து ஒரு வரம் யாரோ என்றோ செய்த புண்ணியம் பேசுவதே ஒரு பிரச்னையாக பலருக்கு இருக்க உன்னால் எழுத இயல்வது ஒரு வரம் அல்லவோ?
கவியரசுவின் வரிகளில் “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு “
நிறைய எழுது பா
நன்றி ஜேகே
Post a Comment