Thursday, June 16, 2011

முரண்

'யப்பா! எவ்ளோ கூட்டம்? அள்ளி அள்ளி சாப்பாடு போட்டு மாளலன்னா..அயிட்டம் வேற ஜாஸ்தியா...பரிமாறி பரிமாறி கை சோர்ந்து பாச்சு...ஆனா மனசு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஆயிரம் பேருக்கு என் கையால பரிமாறி, சாப்பிட்ட சந்தோஷத்த அவா மொகத்துல பாக்கும்போது வலியெல்லாம் பறந்து போச்சு...நீங்கதான் வராம போயிட்டேள்....ஒண்ணு நிச்சயம்..அடுத்தவாளுக்கு பரிமாறி, பசியாத்தறது இருக்கே அதுதான் நிஜம்மாவே உசத்தி' என்றாள்.

அவரின் பார்வை பேப்பரை மேய்ந்தாலும், அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

சட்டென நினைவுக்கு வந்து 'ஏன்னா நீங்க சாப்டேளா?' என்று கேட்டதற்கு 'இல்லை'யெனத் தலையசைத்தார்.

'என்னன்னா நீங்க? நான்தான் சொன்னேனோன்னோ? ப்ரிட்ஜ்ல நேத்து பண்ண சாம்பார், ரசம் இருக்கு; காத்தால உங்களுக்காகவே பாவக்காய் கறி பண்ணி, சாதம் வெச்சேன். எதுவுமே சாப்பிடாம இதென்ன பட்டினியா? ஷ¤கர் வேற' எனச் செல்லமாய்க் கடிந்து கொண்டாள்.

'என்னமோ பசிக்கல; நீ சாப்பாட்டு பேச்சு எடுத்தப்புறம்தான் எனக்கு சாப்படணும்போல தோணறது' என்றார்.

'எனக்கு ரொம்பவே டயர்டா இருக்கு; நான் ரெஸ்ட் எடுத்துக்கறேன். மறக்காம சூடு பண்ணி, நீங்களே போட்டுண்டு சாப்டுங்கோ என்ன?' என்றவளுக்கு அவரது புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது.

4 comments:

Mahi said...

கடுகு குறைந்தாலும் காரம் குறையலைங்கறது மாதிரி குட்டியா ஒரு கதை! :)
சூப்பர்!

தக்குடு said...

எல்லா ஆத்துலையும் இந்த ஜோலி தான் நடக்கர்து!!...:))

கே. பி. ஜனா... said...

Nice story!Congrats!

எல் கே said...

தக்குடு கண்ணா, சீக்கிரம் உன் வீட்டிலும் இது நடக்கும் :)