Saturday, March 17, 2012

வெண் பொங்கல்

என் நண்பர் திரு கணேசன் அவர்கள் எழுதிய கதை.

ராமு, ஜானகி கொண்டு வந்து கொடுத்த filter coffee குடித்துக் கொண்டு, அன்றைய செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
பக்கத்து வீட்டு வாசலில் சின்ன யானை (TATA Ace) வந்து நின்றது.  இறங்கிய 24 வயது இளைஞன், அவன் அம்மா/அப்பா - வீட்டு சாமான்களுடன் குடி புகுந்தனர்.
ஜானகி ராமுவிடம்மாமா பேரு நாராயணன், மாமி பேரு பங்கஜம், பையன் பாலாஜிமுந்தா நேத்திதான் வந்து பால் காச்சிட்டு போனாஎன்று புட்டு புட்டு வைத்தாள்.
கொஞ்ச நாட்கள் கழித்து, பங்கஜம் மாமிஇந்தா ஜானகிஉங்க ஆத்துக்காரருக்கு வெண்பொங்கல் புடிக்கும்னு சொன்னியேஆத்துல பண்ணினேன்…” என்று கொடுத்து விட்டுப் போனாள்.
ராமு பாண்ட் சட்டை மாட்டிக் கொண்டுஜானு, ஆஃபீசுக்கு டைமாச்சு.  சீக்கிரம் டிஃபன் கொடுஎன்று பறந்தான்.
ஏன்னா..இந்தாங்கோ கொஞ்சம் வெண்பொங்கல்!” என்று ஒரு வாய் ஊட்டி விட்டாள்(?!).  அவ்வளவுதான்அப்படியே உட்கார்ந்து, முழு பொங்கலையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டான்!
ராமு சரவண பவன், வஸந்த பவன், ரத்னா கஃபே, அடையார் ஆனந்த பவன், D C Manor, மாம்பலம் Brilliant Tutorials கையேந்தி பவன், வீட்டுக்கு அருகே மல்லிகா மெஸ், கல்யாண டிஃபன், Get together என எல்லாவற்றிலும் புகுந்து, பொளந்து கட்டியவன்.  இதுவரை இப்படியொரு பொங்கலை ருசித்ததில்லை.
அன்றிரவு ஜானகியிடன் வெண் பொங்கலைப் பற்றிச் சிலாகித்து, துளைக்க ஆரம்பித்தான்.  ஜானகிக்கு சற்று பொறாமையாய் இருந்தது.  என்ன மனுஷன் இவன்?  கார்த்தாலே காலில் சக்கரம் கட்டி பறந்து கொண்டுராத்திரியும் தொந்திரவைப் பொறுத்துக்கொண்டு – இவனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒப்புக்காகவாவது பாராட்டியதில்லையே…!”
ஜானகிக்கு சமையல் குறிப்பு புத்தகங்களை வாங்கி பொங்கல் செய்து, ராமு முன்னால் வைத்து,  ஏக்கத்துடன் பார்த்தாள்.  ம்ஹூம்..ராமுவிடம் no reaction.
ஈகோவை விட்டு, பங்கஜம் மாமியிடம் செய்முறை விளக்கம் கேட்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், நெய், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சரிவிகிதம் கொடுத்து ராமுவைப் பார்த்தாள்.
பரவாயில்லை, ஆனாலும் மாமி டேஸ்ட் வரலை…” என்று உண்மையான feedback கொடுத்தான்.
ஜானகியின் கோபம் உச்சகட்டத்திற்குப் போன காரணம், ராமு சொன்ன இந்த வார்த்தைகள்தான். “மாமியின் கை பக்குவமே தனி!”
மறுநாள் ஜானகி, பங்கஜம் மாமி சமையலறைக்குச் சென்று எப்படியெல்லாம் சமையல் செய்கிறாள் என்று ஒன்று விடாமல்ஜெராக்ஸ்எடுத்துக் கொண்டாள்.
மாமி வெண்பொங்கலை அடுப்பிலிருந்து இறக்கி, பத்து நிமிடங்கள் கழிந்தவுடன், எடுத்து ஒரு வாய்போட்டுக் கொள்ளலாம் என்று ஜானகி எத்தனித்த நேரத்தில்
இரும்மா ஜானகி! பெருமாளுக்கு நைவேத்தியம் செஞ்சுட்டு அப்புறமா சாப்பிடலாம்என்று இயல்பாகக் கூறினாள்.
தூக்கி வாரிப்போட்டது ஜானகிக்கு.  அடடா! நாம் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டோம்!’
அன்று முதல், ஜானகியின் சமையலைப் பெருமாள் சுவைத்த பின் தான் அனைவருக்கும்!

1 comment:

(Mis)Chief Editor said...

நண்பர் கணேசன் சின்னச்சின்னதாக மனதில் நிற்கும் சிறுகதைகளைப் புனைந்து வருகிறார். எவ்வளவு பெரிய உண்மையை, மிக இயல்பாக உணர்த்திப் போகும் கதை என்னை நெகிழ வைத்தது. ஷீர்டி சாயி பாபாவும் ‘என்ன செய்தாலும், என்ன உண்டாலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு அர்ப்பணித்து விடுங்கள். விளைவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்கிறார். கண்ணன் கீதையில் சொன்னதும் இதைத்தானே? வாழ்த்துக்கள் கணேசன்!