Monday, February 18, 2013

55 வார்த்தை கதை வரிசை - காதல்

சமீபமாகத்தான் அவளை பெல்ஸ் ரோடு நிறுத்தத்தில் பார்க்கிறேன். நான் போகும் பஸ்-ஸில்தான் அவளும்! Tvs-ல் நான் இறங்குவதால், ’எதுவரை போகிறாள்?!’ (15)


மூன்று நாட்களாக மிக அருகாமையில் நின்றதில், கண்கள் எதேச்சையாக(?!) மோதிக்கொண்டதால், அலுவலகம் இல்லாத சனிக்கிழமையானாலும் டீக்காக உடையணிந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.’எப்படியாவது இன்னிக்கு கேட்டுடணும்' (18)


'கோரா' ஸில்க்/attached short sleeves-ல் அவள். நெருங்கியதில், lavender மணம்! (கண்கள் மோதிக்கொண்டன!) (11)


மெலிதாய்த் தொண்டையைச் செருமி, "எக்ஸ்க்யூஸ் மீ"(5)


'என்ன?' புன்னகைத்ததில் totally flat! (4)


"25 போயிடுத்தா?" (2)

1 comment:

(Mis)Chief Editor said...

என் நண்பர் திரு ஜி ஆர் ஷங்கர் 2005-ல் எழுதிய நெடுங்கதையின் ‘சுருக்’ இதோ 55-க்காக...!